வேன் - பஸ் மோதி கோர விபத்து 7 பேர் உயிரிழப்பு, 42 பேர் படுகாயம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 January 2023

வேன் - பஸ் மோதி கோர விபத்து 7 பேர் உயிரிழப்பு, 42 பேர் படுகாயம் !

நுவரெலியா நோக்கிச் சென்ற வேன் - பஸ் ஒன்றுடன் மோதி கோர விபத்து 7 பேர் உயிரிழப்பு, 42 பேர் படுகாயம் !


நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது.


இதில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் இருந்த  செய்தியாளர் தெரிவித்தார்.


ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வேன் ஒன்றுடன் கொழும்பிலிருந்து தேஸ்டன் கல்லூரி மாணவர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதியதிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


இதில் பஸ்ஸில் பயணித்த 42 பேர் படுகாயடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..


கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad