நீர் கட்டணங்களை செலுத்த புதிய முறைமை ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 16 January 2023

நீர் கட்டணங்களை செலுத்த புதிய முறைமை !

நீர் கட்டணங்களை செலுத்த புதிய முறைமை ! 


நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.


எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் பியால் பத்மநாத குறிப்பிட்டார்.


இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நீர் கட்டணப் பட்டியல் வழங்கும் இயந்திரம் மூலம் மாதாந்த பட்டியல் வழங்குவதுடன், வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.


முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad