மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 January 2023

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து!


மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இலங்கை போக்குவரத்துசபை பேருந்து பாரிய விபத்தில் சிக்கிய நிலையில் அதில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.


வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த பேருந்து ஊறணிச்சந்தியில் உள்ள பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்தில்  பயணிகள் காயமடைந்த 3 பயணிகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வேகமாக வந்த குறித்த பேருந்து வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல்மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து காரணமாக பேருந்து முன்பக்க பகுதி கடுமையான சேதமடைந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad