இன்று மாலை புத்தளம் மீனவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கிய 38 அடி நீளமான பாரிய சுறா மீன் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 30 January 2023

இன்று மாலை புத்தளம் மீனவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கிய 38 அடி நீளமான பாரிய சுறா மீன் !

இன்று மாலை புத்தளம் மீனவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கிய  38 அடி நீளமான பாரிய சுறா மீன்.!


புத்தளம் - நுரைச்சோலை நாவற்காடு கடற்கரையோரத்தில் மீனவர்கள் இன்று கரை வலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கரை வலையை இழுத்த போதே புள்ளி சுறா ஓன்று வலைக்குள் இருப்பதை மீனவர்கள் அவதானித்துள்ளனர்.


சுமார் 38 அடி நீளமான சுறா மீன் ஒன்றே இவ்வாறு கரைவலையில் சிக்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


இதனையடுத்து, வலைகளை அப்புறப்படுத்தி சுறாவை மீண்டும் கடலில் விடும் முயற்சியில் பலமணிநேர முயற்சி பலந்தராத நிலையில் கடற்படையினருக்கும், பொலிஸாருக்கும், வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.


இதனையடுத்து கடற்படையினரின் இயந்திரப் படகின் உதவியுடன் மீனவர்களினதும் அப்பகுதி பொது மக்களினதும் பல மணி நேரப் போராடத்திற்கு பின்னர் புள்ளி சுறா கடலில் விடப்பட்டது.


No comments:

Post a Comment

Post Top Ad