இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் புரிந்துணர்வு உடன்படிக்கை நிகழ்வு இன்று(8) வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு கணக்கியல் மற்றும் நிதியியல் துறைத்தலைவர் எச்.எம்.ஹலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பதில் பீடாதிபதி பேராசிரியர் எம்.பி.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் சன்ஜே பண்டாரா மற்றும் பதில் பீடாதிபதி பேராசிரியர் எம்.பி.எம்.இஸ்மாயில் அவர்களால் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாதிடப்பட்டது. வர்த்தக முகாமைத்துவ பதில் பீடாதிபதி மற்றும் கணக்கியல் மற்றும் நிதியல் திணைக்களம் மற்றும் பட்டய கணக்காளர் நிறுவன தலைவர்கள் மேற்கண்டாவாறு உரையாற்றியமை குறிப்பிடதக்கது;
மேலும் உரையாற்றுகையில்; இவ்வமைப்புடனான புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் கற்றல், கற்பித்தல், ஆய்வு மற்றும் புத்தாக்கத் துறைகளில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் பயனடைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் போது ஆய்வு மாநாடுகள், ஆய்வு வெளியீடுகள், ஆசியர் மற்றும் மாணவர் பயிற்சிகள் உள்ளிட்ட பல ஒன்றினைந்த வேலைத் திட்டங்களை துரிதகதியில் நடைமுறைப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது. இது போன்ற புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிகழ்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகார அலுவலகத்தால் ஓருங்கிணைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிகழ்வில் சர்வதேச விவகார பணிப்பாளர் முஹமட் ரூலீ மற்றும் பணியாளர்கள் மையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஏ.ஜாஃபர், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் விரிவுரையாளர், மற்றும் பட்டய கணக்காளர் நிறுவாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment