பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கான விஷேட அறிவிப்பு. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 14 December 2022

பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கான விஷேட அறிவிப்பு.


இன்று முதல் பாடசாலைகள் திறக்கப்பட்ட போதிலும் காலநிலை மாற்றம் காரணமாக பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவதை அறிவுறுத்துவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்காலத்தில் சுவாச நோய்கள் மற்றும் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதால் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது நன்மை பயக்கும் என சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில், “இன்றைய நாட்களில் குளிர் மற்றும் தூசி என இரண்டு காரணங்களால் சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகம் இருப்பதால், குழந்தைகள் இன்னும் சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு முகக்கவசம் அணிந்து பாடசாலை சென்றால் நல்லது.


 எனவே, இது பாடசாலைகளிலும், தினப்பராமரிப்பு நிலையங்களிலும் எளிதில் பரவும். பிள்ளைகளுக்கு இருமல் மற்றும் சளி இருந்தால், வீட்டிலேயே வைத்திருங்கள். முடிந்தால் பாடசாலை செல்லும் சிறுவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது” என்றார். 

No comments:

Post a Comment

Post Top Ad