புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதி சுற்றுலா பயணி உட்பட இருவர் உயிரிழப்பு, காலி, உனவட்டுன பகுதியில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலா பயணியாவார். இச்சம்பவம் இன்று (01) முற்பகல் இடம் பெற்றது. பெலியத்தையிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரஜரட்ட ரஜின புகையிரததுடனே முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
No comments:
Post a Comment