வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகம பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்(STF) முன்னெடுத்த சோதனையின் போது குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 32 கிலோ 720 கிராம் ஹெரோயின், கடவுச்சீட்டு, 05 கையடக்கத் தொலைபேசிகள், 01 சைக்கிள் மற்றும் 01 வேன் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் வத்தளை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment