கட்டாரில் 343 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழப்பு!. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 1 December 2022

கட்டாரில் 343 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழப்பு!.

2014 ஆம் ஆண்டு முதல் கட்டாரில் பணியாற்றிய 343 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக (SLBFE) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்புக்கான காரணம் இயற்கை மரணம், தற்கொலை, கொலை, வீதி விபத்து, ஏனைய விபத்துகள், கொரோனா இறப்புக்கள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத மரணங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளது.


அதன்படி, 207 இயற்கை மரணங்கள், 30 தற்கொலை இறப்புகள், 6 வீட்டுக் கொலைகள், 50 வீதி விபத்துகள், 35 ஏனைய விபத்துகள், 14 கொரோனா வைரஸ் இறப்புகள் மற்றும் ஒரு உறுதிப்படுத்தப்படாத மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


2015 ஆம் ஆண்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, 29 இயற்கை மரணங்கள், 4 தற்கொலைகள், ஒரு கொலை, 12 வீதி விபத்துகள் மற்றும் 6 உறுதிப்படுத்தப்படாத மரணங்கள் பதிவாகியுள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளன.


அதேபோல 2020இல் மிகக் குறைவான இறப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, 13 இயற்கை மரணங்கள், 2 தற்கொலை மரணங்கள், 3 இல்லக்கொலை மரணங்கள்,  2 விபத்துக்கள் மற்றும் ஒரு உறுதிப்படுத்தப்படாத மரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, இந்த வருடம் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையில் மாத்திரம்  37 இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad