அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் மருதானை சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்தப் போராட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, பொது மக்களும் பெருமளவிலானோர் தற்போது அங்கு விரைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment