குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பொரளை சிறிசுமண தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறிசுமண தேரர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்தே அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார். திலினி பிரியமாலி எனும் பெண் ஒருவர் செய்த பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பிலேயே தேரர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment