போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் - தமிழக குரல் - இலங்கை

Post Top Ad

Thursday, 17 November 2022

போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல்

police-sri-lanka-3

அநுராதபுரம் விஜயபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது பெண்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tamilaga%20kural

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் 6 பெண் சந்தேக நபர்களையும் நான்கு ஆண் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். விஜயபுர, கடபாஹா பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், அப்பகுதி பெண்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பல பெண்களும் ஆண்களும் கற்களுடன் வந்து பொலிஸ் அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது .

No comments:

Post a Comment

Post Top Ad