கல்கமுவ – குருநாகல் அனுராதபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த இரண்டு பெண்கள், இரு சிறுமிகள் மற்றும் இரு சிறுவர்கள் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அதில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்கமுவ பிரதேசத்தில் வசித்து வந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டியின் சாரதி, பின்னால் பயணித்த இரண்டு பெண்கள், இரு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் கல்கமுவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment