இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் இன்று (08) நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகளுக்கு இது முழு சந்திர கிரகணமாகத் தோன்றினாலும், இலங்கைக்கு இது அரைச் சந்திர கிரகணமாகவே காணப்படுகிறது.
மாலை 5.48 க்கு கிழக்கு அடிவானத்தில் இருந்து சந்திரன் உதயமாகும் நிலையில், அதன் கடைசி பகுதியை மட்டுமே பகுதி சந்திர கிரகணமாக இலங்கை மக்கள் காணக்கூடியதாக இருக்கும். இந்த கிரகணம் மாலை 6.19 க்கு முடிவடையும்.
மீண்டும் முழு சந்திர கிரகணத்தை 2025 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் திகதியன்று உலக மக்கள் காணமுடியும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment