வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பதிவாளர் நாயகத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி அமைச்சில் நேற்று இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்தின்போது ஏற்படும் தடைகளை நிவர்த்திக்கும் வகையில், தற்போது அமுலில் உள்ள சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு பதிவாளர் நாயகத்திற்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment