கடந்த சில தினங்களை விட காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஒரு கிலோ கேரட் 420 ரூபாய்
- ஒரு கிலோ போஞ்சிக்காய் 520ரூபாய்
- கோவா கிலோ 360ரூபாய்
- கத்திரிக்காய் கிலோ 400 ரூபாய்
- ஒரு கிலோ பூசணிக்காய் 280ரூபாய்
- பச்சை மிளகாய் கிலோ 400 ரூபாய்
- தேசிக்காய் கிலோ 800 ரூபாய்
- ஒரு கிலோ தக்காளி 440 ரூபாய்
இதேவேளை, பெரிய வெங்காயத்தின் விலைகள் வழமையை விட ஒப்பீட்டளவில் அதிகளவில் காணப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். பொதுச் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 280 ரூபா முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் அதேவேளை, பேலியகொட மானிங் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 250 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
பேலியகொட மெனிங் சந்தையில் உள்ளூர் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 330 ரூபாவிற்கும் நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் 480 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment