இலங்கையில் சுமார் 500,000 பழங்டியினர் வசிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்தாலும் இம் மக்கள் தற்பொழுது மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகிறார்கள். பழங்குடியினர் சார்பாக ஒரு ஆசனம் என்பது மிகவும் சிறந்த ஒரு கோரிக்கையாகும்.
அவுஸ்ரேலியா, நேபாளம் மற்றும் பல ஆபிரிக்க நாடுகளிலும் இவ்வாறான விதிகள் உண்டு. பாரம்பரியத்தை வழுப்படுத்தும் வகையில் இச்செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் மிகவும் சிறப்பான ஒர முன் உதரணமாக அமையும் என நம்புகிறேன்.
அதே சமயம், கட்சி ரீதியாக அவர்களுக்குள்ளும் தலைவர்கள் உருவாக்கப்படும் ஆபத்தும், 3ம் தர அரசியலில் அவர்களுடைய சமூக கட்டமைப்பு சிதைந்துபோகும் ஆபத்தும் இதில் உள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்..
அவர்களுடைய சமூக கட்டமைப்பு சிதைக்கப்டாத வண்ணம் அவர்களுடைய அரசியல் இருக்க வேண்டும். ஆட்சிக்கு வரும் கட்சியின் சார்பில் பழங்குடியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினராகும் வண்ணம் சாசனம் அமைக்கப்பட்டால், 3ம் தர அரசியல் அவர்களை சிதைக்காது என நான் கருதுகிறேன்..
No comments:
Post a Comment