நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 3 November 2022

நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது!


நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், புகைப்பிடிப்பவர்களில் 51 சதவீதமானவர்களில் அதிலிருந்து விலகுவார்கள் என தாம் நம்புவதாக அந்த அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிலையங்களில் சிகரெட் சில்லறை விலைக்கு உள்ளதே அவர்களுக்கு அதிலிருந்து விடுபட தடையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, அதற்கு தடை விதிப்பதுடன், சிகரட்டிற்கான விலை மேலும் அதிகரிக்கப்பட்டு, அதற்காக விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad