50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை வில்லைகள் பறிமுதல்! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 3 November 2022

50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை வில்லைகள் பறிமுதல்!

கார்ட்போர்ட் பெட்டிக்குள் மிக சூட்சுமமாக மறைத்து கொண்டுவரப்பட்ட 50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை வில்லைகள், இலங்கை சுங்கப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தபால் மதிப்பீட்டுப் பிரிவிற்கு கிடைத்த தபால் பொதியொன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தனியார் பாவனைக்கான பொருட்கள் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டு இந்த பொதி ஜெர்மனியிலிருந்து அங்கொடை பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த பொதியினுள் கார்ட்போர்ட் பெட்டியொன்றினுள் மிகவும் நுட்பமான முறையில் பொதியிடப்பட்ட 2,387 கிராம் நிறையுடைய 4,956 மெத்தபெட்டமின் எனப்படும் போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைப்பற்றப்பட்ட போதை வில்லைகள் சுமார் 49.56 மில்லியன் ரூபா பெறுமதி என சுங்க ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார். இது தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னரான அடுத்தகட்ட விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட போதை வில்லைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad