வரவு - செலவுத் திட்டம் 2023: அரச செலவீனம் அதிகரிப்பு -ஹர்ஷ டி சில்வா, இவ்வாண்டு 6.2 ட்ரில்லியன் ரூபாவாகவுள்ள அரச செலவீனமானது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் 7.9 ட்ரில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது ஏறக்குறைய 1657 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது நிதி தொடர்பான செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. இதுதான் அரச கொள்கையா? அரச செலவீ னம் கணிசமாக அதிகரித்துள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மதிப்பிடப்பட்ட அரச செலவில் அரச வருமானம் உள்ளதா என கணிப்பது கடினம்.
“அரசாங்கம் அதன் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது வருமானத்தைப் பெற எதிர்பார்க்கும் வழிகளை விளக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment