கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில், கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், மெற்றோ பொலிடன் கல்லூரியின் தவிசாளர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்
கெளரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி என்.எம்.ஏ.மலிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதி கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் மற்றும் அதிதிகள் பேன்ட் இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன
இதன் போது கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் 04 மாணவர்களுக்கு மெற்றோ பொலிட்டன் கல்லூரியில் இலவசமாக கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில் முன்னாள் முதல்வரும் மெற்றொ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளர் கலாநிதி.சிராஸ் மீராசாஹிபினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment