மீண்டும் மஹிந்த ராஜபக்ச பிரதமர்? - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 22 October 2022

மீண்டும் மஹிந்த ராஜபக்ச பிரதமர்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அந்த முன்னணியின் சிரேஷ்டர்கள் குழுவிற்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்பார் என அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.


பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட போதிலும், அமைச்சரவையில் அவ்வாறான கலந்துரையாடல் இடம்பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad