திருகோணமலை கந்தளாய் பிரதான வீதியின் கப்பல்துறை பகுதியில் இலங்கையில் இருந்து அழிந்துவரும் விலங்கினமான புலியொன்று வாகனம் ஒன்றில் மோதுண்டு இறந்துள்ளது.
இச்சம்பவம் இன்று(10) காலை இடம்பெற்றுள்ளதாகவும், புலி வீதியைக் கடக்க முற்பட்ட போதே வாகனத்தில் மோதுண்டிருக்கலாம் என வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை வனவிலங்கு தள காவலர் திலும் அபேரத்ன, சிவில் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டாளர் ஏ.எம்.அர்சத், எச். நிலாந்த, சுகததாச ஆகியோர் சடலத்தை பரிசோதித்து, பிரேத பரிசோதனைக்காக கிரித்தலை கால்நடை மருத்துவப் பிரிவிற்கு புலியின் சடலத்தை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment