விபசாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். பௌத்த நாடான தாய்லாந்து விபசாரத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது என்றும் அது அவர்களின் மதம் அல்லது கலாசாரத்திற்கு தீங்கு விளைவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கஞ்சா ஏற்றுமதியை எவ்வாறு சட்டப்பூர்வமாக்குவது என்பதை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ஜனாதிபதியின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அதற்கு அதிகாரிகள் தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கைக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் மற்றும் குடியுரிமை குறித்த குற்றச்சாட்டுகள் ஆகியவற்றைப் பெறுவதற்கு 22ஆவது அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கருத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment