குச்சவெளி பிரதேச சபையின் எதிர்வரும் 2023 ஆண்டுக்கான பாதீடு (வரவுசெலவு திட்டம்) தொடர்பான விசேட கலந்துரையாடல் அகம் நிறுவனத்தின் ஏற்ப்பாட்டில் பிரதேச சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஜனாப் ஏ.முபாறக் அவர்களும் கலந்து கொண்டு வரவுசெலவு திட்டம் தொடர்பான பல விடயங்களை தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் பிரதேச சபையின் உப தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் திருமதி மாலினி அசோக்குமார், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சனசமூக நிலைய பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment