கல்முனை நகர மக்களுக்கு இன்று நடமாடும் ஆயுள்வேத மருத்துவ முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 8 October 2022

கல்முனை நகர மக்களுக்கு இன்று நடமாடும் ஆயுள்வேத மருத்துவ முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது !

கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ILM. றிபாஸ் அவர்கள் ஆரம்ப உரை நிகழ்த்தியதுடன் பிரதேச செயலாளர் லியாகத் அலி சிறப்புரையையும் நிகழ்த்தினார்.


இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் பிரதி பணிப்பாளர் Dr. MBA வாஜித் அவர்களும் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி Dr.MCM மாஹிர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


கல்முனை பிராந்திய ஆயுள்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி Dr.M.A நபீல் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு  தொடர்ந்தும் இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்து தருமாறும் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad