ஒரே குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (25.10.2022) தீப்பிடித்து எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு நுவரெலியா லவர்ஸ்லிப் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே, நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் இவ்வாறு முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்துள்ளது.
முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்த போது அருகில் இருந்தவர்கள் பல வழிகளில் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். முச்சக்கரவண்டி இவ்வாறு தீப்பற்றி எரிந்த போது, முச்சக்கரவண்டிக்குள் தாய், தந்தை மற்றும் மகளும் பயணித்துக்கொண்டிருந்ததுடன், தந்தையே முச்சக்கரவண்டியை செலுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த மூவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இந்த தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment