கடன் மறுசீரமைப்பு செயல்முறையுடன் இணைந்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் அனைத்து கடன் வழங்குனர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்ததாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்று (25) தெரிவித்துள்ளார். இலங்கை கொள்கை கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.
இலங்கை கொள்கை கற்கைகள் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான மாநாடு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றது.
No comments:
Post a Comment