பண்டாரவளையில் வீட்டில் மேல் பகுதியில் மிகவும் சூட்சமமான முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
எல்ல பகுதியில் இன்றைய தினம் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே கஞ்சா செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
41 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்பதோடு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment