முச்சக்கர வண்டிகளின் முதலாவது கிலோ மீற்றர் பயணக் கட்டணங்கள் 20 ரூபாவால் குறைக்கப்படுகின்றன. முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை அடுத்தே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுவரை முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றர் பெற்றோல் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தது. எனினும் அதனை இரட்டிப்பாக்குவதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது. இது முதல் கட்டமாக மேல் மாகாணத்தில் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
No comments:
Post a Comment