யாழ்ப்பாணத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 25 October 2022

யாழ்ப்பாணத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு.

யாழ் – வடமராட்சி, உபய கதிர்காமம் பகுதியில் தோட்டக் கிணற்றுக்குள் வீழ்ந்து 02 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று(24) மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தோட்டத்தில் 06 பேர் இணைந்து மதுபானம் அருந்தி களியாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஒருவர் கிணற்றுக்குள் தவறி விழவே, அவரை காப்பாற்றுவதற்காக மற்றுமொருவரும் கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதன்போது இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் 24 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad