வீடொன்றுக்குள் சிக்கிய சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 5 October 2022

வீடொன்றுக்குள் சிக்கிய சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு!

கொட்டகலை, திம்புளை – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் சிக்கிய சிறுத்தைப்புலி, சுமார் 5 மணிநேர கூட்டு நடவடிக்கையின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.


ரந்தெனிகல மிருக வைத்தியசாலையின் அதிகாரிகள் குழுவொன்றும், நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்தே, சிறுத்தைப்புலிகளை பிடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினர். குறித்த கூட்டு நடவடிக்கை வெற்றிகரமாக முடியும் வரை பிரதேசத்துக்கு தேவையான பாதுகாப்பை திம்புளை – பத்தனை பொலிஸார் வழங்கினர்.


சுமார் 4 அடி நீளமான, ஒரு வயதான இந்த ஆண் சிறுத்தைப்புலி, நாயொன்றை வேட்டையாட வந்தவேளை, வீட்டின் பின்பகுதியில் உள்ள அறைக்குள் விழுந்து அதற்குள் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்டுள்ள சிறுத்தை, ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


அதன் உடல் நிலை பரிசோதிக்கப்பட்ட பின்னர், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அது பாதுகாப்பான வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad