டிசம்பர் 14, 2020 அன்று, வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை பிறந்து சில மணித்தியாலங்களில் உயிரிழந்தது. மருத்துவமனையின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் முறைப்பாடு அளித்திருந்தார்.
மேற்படி முறைப்பாட்டிற்கு அமைவாக சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் திடீர் முற்றுகைப் பிரிவு அதிகாரிகள் வவுனியா வைத்தியசாலைக்கு சென்று மூன்று நாட்களாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பதிவேடுகள் மற்றும் ஆவணங்களையும் சரிபார்த்தனர். அதேவேளை, பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் வவுனியா வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு, விசாரணையில் தாதியர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள், ஊழியர்கள், தாதியர்களின் கையொப்பங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்கள் மற்றும் சிசு இறந்த போது கடமையாற்றியவர்களின் விபரங்களைச் சரிபார்த்தனர்.
இதேவேளை, தனது குழந்தையின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தினால் தீர்வு கிடைக்கும் என நம்புவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கூறியுள்ளார்
No comments:
Post a Comment