சட்டவிரோதமான முறையில் சேமித்த பணத்தின் மூலம், 65 இலட்சம் ரூபா மதிப்புள்ள கார் மற்றும் 2.5 கோடி ரூபா பெறுமதியான ஜீப் ஆகியவற்றை கொள்வனவுசெய்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இவர், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் தனது தந்தை சேமித்த பணத்தைப் பயன்படுத்தியே குறித்த இளைஞர் வாகனங்களை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான காவல்துறை விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் இன்று (11) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment