தொட்டலங்க – கஜிமாவத்த பிரதேசத்தில் அடுத்தடுத்து வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (27) இரவு ஏற்பட்ட தீயானது தீயணைப்புப் பிரிவினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை என்றும், 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment