ஹொரண பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலைப் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்., சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment