கல்முனை ஹூதா ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த 15 வருட காலமாக சேவையாற்றிய இரு முஅத்தின்களின் சேவை நலன் பாராட்டு விழா நேற்று முன்தினம் (30) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்ற
இச்சேவை நலன் பாராட்டு விழாவில்,முஹைதீன் பிச்சை ஷேக் அப்துல் காதர் (முஅத்தின்) மற்றும் அலியார் உதுமாலெப்பை (முஅத்தின்) ஆகியோர் நினைவுச்சின்னம், நன்கொடைப் பணம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இவர்களது அர்ப்பணிப்புமிக்க சேவையை கௌரவித்து இந்நினைவுச் சின்னம் வழங்கி வைக்கும் நிகழ்வில், பேருவளையைச் சேர்ந்த மெளலவி அஷ்ஷெய்க் ஆர்.நில்பத் (அப்பாஸி) கெளரவ அதிதியாக கலந்து கொண்டார்.
இங்கு கல்முனை ஹூதா ஜும்ஆ பள்ளிவாசலின் பேஷ் இமாம் மெளலவி ஸாபித் (ஸரயி,றியாதி) உட்பட பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்கள், தஃவா குழு உறுப்பினர்கள், ஊர் ஜமாஅத்தார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
( எஸ்.அஷ்ரப்கான் )
No comments:
Post a Comment