உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் -கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எம்.பி தெரிவிப்பு..! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 21 April 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் -கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எம்.பி தெரிவிப்பு..!

1000106402

தங்களது அரசியல் தேவைகளுக்காக, ஆட்சிகளை கொண்டுவருவதற்காக, ஆட்சிகளை உருவாக்குவதற்காக சிலரால் முஸ்லிம் இளைஞர்களை திசைதிருப்பி இவ்வாறு மிக மோசமான செயலை மேற்கொண்டிருந்தார்கள் என்றும் இதன் மூலம் முழு முஸ்லிம் சமூகமும் தலைகுனிந்து நிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்.


நேற்று (20) காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத்தெரிக்கையிலேயே இவ்வாறு தெரித்தார்.


அவர் தொடர்ந்து தெரிவிகையில்,


இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களுடைய குடும்பங்களுக்காக பிராத்திக்கிறோம். நாங்கள் மிகவும் மனவேதனை அடைந்தோம். இன்னமும் அந்த வேதனை அடைகிறோம்.


காத்தான்குடி பிரதேசம் அநியாயமாக பல சோதனைகளையும் சவால்களையும் சந்திந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள்.


தற்போதுதான், சில உண்மைகள் வெளிவந்துகொண்டிருக்கிறது. யார் பிண்ணணியில் இருந்தார்கள், யார் இதை செய்தார்கள் போன்ற உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad