நெஸ்ட் இண்டர்நெசனல் நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும், தனது நிறுவனத்தின் புதிய அங்கமாக உருவாகும் Nest360 ன் சேவை பற்றிய அறிமுகமும், ஊழியர்களுக்கான மேலங்கி மற்றும் அடையாள அட்டை வழங்கள் நிகழ்வும் நெஸ்ட் இண்டர்நெசனல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் என்.எம்.சப்னாஸ் தலைமையில் நெஸ்ட் வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
வட்சப் ஊடாக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்
நெஸ்ட் இண்டர்நெசனல் நிறுவனத்தின் புதிய அங்கமாக உருவாகியிருக்கும் நெஸ்ட்360 சேவை பற்றி உரையாற்றிய பொரியியலாளர் சப்னாஸ் கூறுகையில்,
நெஸ்ட் 360 சேவையினூடாக உங்கள் வீடுகளிலோ, அலுவலகங்களிலோ, கடைகளிலோ ஏற்படும் சிறிய குறைபாடுகளையும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் உடனுக்குடன் குறைந்த கட்டணங்களுடன் நேர்த்தியான முறையில் திருத்தித்தர கூடியவாரு நெஸ்ட் இண்டர்நெசனல் நிறுவனம் சேவையை ஆரம்பித்துள்ளது . இந்த சேவை திட்டத்தின் ஊடாக Nest International Private Limited கம்பனி எதிர்பார்ப்பது யாதெனில் வாடிக்கையாளர்களிற்கு கட்டடக்கலை சார்ந்த அனைத்து விதமான சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் மிகவும் நேர்த்தியாகவும், உத்தரவாதத்துடனும், குறுகிய காலத்தில் செய்து கொடுப்பதாகும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக சட்டத்தரணி சப்ராஸ் , ஊடகவியலாளரும் சமாதான நீதவானுமாகிய றிஸாத் ஏ காதர் , கிராம உத்தியோகத்தர் அஸ்லம் சஜா,ஆசிரியர் R. நௌசத், ஆசிரியர் ஜெசீல்,EPL கல்லூரியின் பனிப்பாளர் நிப்றாஸ் அஹமத், ஊடகவியலாளர் அரூஸ், Senior Qs ரியாசத்,கணக்காளர் சிப்லி, பிரபல தொழிலதிபர் அர்சாத்(JP), ஊடகவியலாளர் றமீஸ், முன்னால் அக்கறைப்பற்று இளைஞர் சம்மேளன தலைவர் றுக்ஸான் மற்றும் நெஸ்ட் இண்டர்நெசனல் நிறுவனத்தின் குடும்பத்தினர், இன்னும் பல முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
( றிஸான் றாசீக் )
No comments:
Post a Comment