ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று (21) வெள்ளிக்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளரும் நலன்புரி அமைப்பின் தலைவருமான ஏ. தாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி நோன்பின் மகத்துவமும் இன நல்லுறவும் என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.ஏ.அமீர், கல்குடா உலமா சபை நிருவாகிகள், இராணுவ உயர் அதிகாரிகள், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, பிரதேச செயலக தமிழ் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
( எஸ்.எம்.எம்.முர்ஷித் )
No comments:
Post a Comment