2025ம் ஆண்டுக்கான வருடாந்த இப்தார் நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) மிக விமரிசையாக நடைபெற்றது.
சமூக நல்லிணக்கம் இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி சிங்களத்தில் அல்ஹாஜ் மௌலவி சஹ்றான் ஹஸன் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இதன் போது, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச். சமூத்திர ஜீவ அவர்களின் 39 வருட சேவையைப் பாராட்டியும், எதிர் வரும் 2025.04.12 பிரிவிடை நிகழ்வினை முன்னிட்டும் நினைவுச் சின்னமும், பொன்னாடை போர்த்தி அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்க, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா,சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்,சம்மாந்துறை பொலிஸ் நிலைய உபதேச குழுவின் தவிசாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் ஆகியோரினால் கௌரவிக்கப்பட்டது.
மேலும், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் அவர்களுக்கு டேலன்ட் பிளஸ் டிவியின் ஆலோசகரினால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச். சமூத்திர ஜீவ பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்க, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா,மேல் நீதிமன்ற அரச சட்டத்தரணி லாபீர் சட்டமுதுமானி எம்.ஏ.எம்.லாபீர், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றசாட், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி.பிரபாசங்கர்,சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி விஹாரி ராஜகுரு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பிரதம இலிகிதர் பிரபாகர், பொலனறுவை மாவட்ட சிரேஷ்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ், சம்மாந்துறை நீதிமன்ற சட்டத்தரணிகள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய உபதேச குழுவின் தவிசாளர் ஏ.ஜே. காமில் இம்டாட், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். மகேந்திர குமார், கல்முனை, பெரியநீலாவணை, சவளக்கடை, நிந்தவூர், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சர்வ மதத்தலைவர்கள், வர்த்தக சங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், முக்கியஸ்தர்கள் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
( தில்சாத் பர்வீஸ் )
No comments:
Post a Comment