பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் அடிப்படையில் தரம் மூன்றிற்கான மகிழ்ச்சிகரமான பிரவேசமும் கண்காட்சியும் எனும் நிகழ்வு ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.எம். ஜாபிர் கரீம் தலைமையின் நடைபெற்ற நிகழ்வுக்கு அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரியும் ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயல் தலைவருமான வைத்தியர் எஸ்.ரீ.எம். நஜீப்கான், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், ஆசிரிய ஆலோசகர் எம்.பி.எம்.நபீர், ஹூதா ஜும்மா பள்ளிவாயலின் உப தலைவரும் பாடசாலையில் நிறைவேற்று அபிவிருத்திக்குழு செயலாளருமான MJm எம்.ஜே.எம்.ஜவாஹிர் ஸஹ்ரி, பாடசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினரான வர்த்தகர் எம்.ஐ.எம். பர்ஹான், அல்கிம்மா மற்றும் டிபி எடியுகேஷனின் கல்குடாவுக்கான ஊடக இணைப்பாளர் ருமான எம்.ஐ.எம். அஸ்பாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கைப்பணிப் பொருட்களும் உணவுப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
( எஸ்.எம்.எம்.முர்ஷித் )
No comments:
Post a Comment