கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் 2025ம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (11) பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் ஒருங்கினைப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட நெல் கொள்வனவு, காட்டு யானையின் அட்டகாசம் அதனை கட்டுப்பத்துவதற்கான யானை வேலி அமைத்தல், கல்வி அபிவிருத்தி, சுகாதாரம், போக்குவரத்து, மஜ்மா கொவிட் மையவாடிக்கு காணி வழங்கியவர்களுக்கான மாற்று ஒழுங்கு என பலதரப்பட்ட விடயங்கள் இங்கு ஆராயப்பட்டு தீர்வுகளும் காணப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எ.ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ். முகமட் நலீம், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர் எம்.ஏ.சி.எம்.நியாஸ்,பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஆர்.ஷியாஹுல் ஹக், பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், ஓட்டமாவடி கோட்ட கல்வி அதிகாரி ஏ.எம்.எம்.தாஹிர், பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொலீஸ் நிலைய உயர் அதிகாரி, விஷேட அதிரடைப்படை உயர் அதிகாரிகள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment