புகையிர வண்டியில் மோதி நபரொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 January 2025

புகையிர வண்டியில் மோதி நபரொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் !



இந்தச் சம்பவம் நேற்று (22) புதன்கிழமை காலை ஓட்டமாவடி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.


கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஓட்டமாவடி பகுதியால் செல்லும் போது நபரொருவர் புகையிரத பாதையை கடக்கும் போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.


இதில், காயமடைந்தவர் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி அசனார் சீது (வயது 51) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

                                     ( எஸ்.எம்.எம்.முர்ஷித் )

No comments:

Post a Comment

Post Top Ad