மட்டக்களப்பு மாவட்டம் பழுகாமம் பாஞ்சாலி கலைக்கழகத்தினரால் நேற்று முன்தினம் (04) இரண்டு தசாப்தங்களின் பின்னர் கிராமியக்கலையாகிய கரகம் "வள்ளிதினைப்புனம்" மீள் உருவாக்கம் செய்யப்பட்டு சதங்கை அணிவிழா இடம்பெற்றது.
இதன் தலைவராக சு.உதயகுமார் அவர்களும் இதனை ஜெகநாதன் ஆசிரியர் நெறியாள்கை செய்திருந்தார் ,கேதீஸ்வரன் அவர்கள் மத்தள அண்ணாவியாராகவும்,பாக்கியராசா அவர்கள் சல்லரி அண்ணாவியராகவும் செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த நிகழ்வானது மறைந்த கலைஞர் கரகக்குரிசில் அமரர் வடிவேல் அவர்களின் நினைவாக இடம்பெற்றிருந்தது.
அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) அவர்கள் மற்றும் பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த கரக அரங்கேற்றமானது எதிர்வரும் சிவராத்திரி தினத்தன்று கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடத்துடன் இணைந்து மிக விமர்சையாக இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
( ரஞ்சன் )
No comments:
Post a Comment