கல்குடா - கட்சி அலுவலகம் திறப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 27 August 2024

கல்குடா - கட்சி அலுவலகம் திறப்பு !



அரகல நிகழ்வு நாட்டிற்கு எற்பட்ட கரைபடிந்த நிகழ்வாகும் என்று வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் தவிசாளர் தேசமான்ய மங்கள செனரத் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஸ்மார்ட் தேர்தல் அலுவலகத்தை மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்து உரையாற்றுகையிலயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,



அரகலையின் பின்னர் நாட்டை பெறுப்பெடுக்குமாறு முன்னாள் ஆட்சியாளரால் பலரிடம் வேண்டுகோல் விடுக்கப்பட்ட போது அவர்கள் பயத்தில் ஒதுங்கிய போது துணிந்து பாரம் எடுத்து நாட்டை கட்டியெழுப்பிய பெறுமை இன்றைய ஜனாதிபதியும் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறக்கூடியவருமான ரணில் விக்ரமசிங்க என்பதனை எவரும் மறந்து விடக்கூடாது.

வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.

மக்களின் அதிக வாக்குளைப் பெறுவதுடன் மாத்திரம் இல்லாமல் அதிகமான கட்சிகளின் ஆதரவினையும் பெற்று ரணில்விக்ரமசிங்க வெற்றிவாகை சூடுவார் என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை. ஜனாதிபதி சுயாதீன வேற்பாளர் அவர் எந்த கட்சி சின்னத்திலும் போட்டியிடவில்லை அவரைப்போன்று இந்த அலுவலகமும் எந்த கட்சி சார்பின்றி சுயாதீனமாக இயங்கும் என்றும் தெரிவித்தார்.


இங்கு உரையாற்றிய ஈழமக்கள் ஜனநாயக முன்னனி (ஈரோஸ்) செயலாளர்; நாய ராஜநாதன் பிரபாகரன் கருத்து தெரிவிக்கையில்.

வட்சப் சேனல் ஊடாக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

இன்றைய நாள் முக்கியமான நாள் எமது மக்கள் இந்த நாட்டினுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற நாளாகத்தான் இன்றைய அலுவலகம் திறந்திருக்கின்ற நாளை கருத வேண்டி இருக்கு

ஈரோஸ் என்ற எங்களது இயக்கம் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்கின்ற என்ற முடிவுக்கு வந்துள்ளோம் ஈரோஸ் இன்று வடக்கு கிழக்கு மலையகம் அகில இலங்கை ரீதியாகவும் உள்ள ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு முழு மனதுடன் களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டு இருக்கிறம் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக கொண்டு வருவதற்காக அதற்கான காரணம் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவை எனக்கு நன்கு தெரியும் எனது மிக நீண்ட நாள் நண்பன் கொரோனாவால் நாடு பாதிக்கப்பட்டது அதே போன்று அரகல என்று ஒரு கீழ்த்தரமான செயற்பாட்டால் நாடு பின்நோக்கிப்போனது குழந்தைகளுக்கு பால்மா இல்லை, சுகயீனான ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு ஆட்டோவுக்கு பெற்றோல் இல்லை, எதை எடுத்தாலும் தட்டுப்பாடு இச்சந்தர்ப்பத்தில் கோத்தபாய நாட்டை யாராவது பாரம் எடுங்கள் என்று ஒப்பாரி வைத்த தருணம் அந்த சந்தர்ப்பத்தில் யாரும் வரவில்லை அந்த சந்தர்ப்பத்தில் நாட்டை துணிந்து வந்து பாரம் எடுத்த ஒரே மனிதன் இன்றைய ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கதான்.


இன்று பெற்றோலுக்கு தட்டுப்பாடில்லை, பால்மா இலகுவாக கிடைக்கின்றது, மருந்துக்கு தட்டுப்பாடில்லை இலகுவான போக்குவரத்து மூன்று இன மக்களும் சந்தோசமாக வாழுகின்றனர்.அது மட்டுமல்ல இன்று சர்வதேசமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவர் யார் என்றால் அது ரணில்விக்ரமசிங்க இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு, நாட்டை பாதுகாக்க வல்லமையுடைய ஒரே ஒரு தலைவர் என்றால் இன்றைய ஜனாதிபதிதான் என்பதில் மாற்று கருத்து எவருக்கும் இருக்காது.


சஜித் பிரேமதாசா ஒரு நல்ல மனிதர் நாட்டை நேசிக்கக்கூடிய மனிதர் மக்களை நேசிக்ககூடிய மனிதர் அதே போன்றுதான் அருரகுமார திஸாநாயக்கா ஆனால் நாட்டை முன்னேற்க்கூடிய மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றக்கூடிய மேற்கத்தய நாடுகளுடனான தொடர்பாடல் ரணில்விக்ரமசிங்கவை தவிர வேறு யாருக்கும் கிடையாது



ஈழவர் ஜனநாயக முன்னனியின்ட செயலாளர் நான் ஆனால் இன்று வவுனியாவில் கொள்ளையடித்துக் கொண்டு சூரையாடிக் கொண்டு குடிவெறியில் திரிந்த நான்கு ஐந்து பேரை நான் கட்சியில் இருந்து துறத்திவிட்டேன் துசியந்தன் என்று வவுனியாவை சேர்ந்த நபர் இராசநாயகம் என்று இன்னுமொருவர் ஈரோசுக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை ஈரோஸ் எந்த கால கட்டத்திலும் யாரையும் காட்டிக் கொடுத்தோ கூட்;டிக் கொடுத்தோ, கப்பம் வாங்கியோ கொள்ளையடித்தோ வாழ்ந்த சரித்திரம் இல்லை அப்படி யாராவது சொல்வார்களாக இருந்தால் இந்த கட்சியை கலைத்து விட்டு செல்ல நான் தயாரக இருக்கிறேன் கட்சியின் பெயரை வைத்து தவராக செயட்பட்ட சிலரை கட்சியில் இருந்து துறத்தி விட்டு இருக்கிறேன் அந்த கூட்டம் சஜித் பிரேமதாசாவை சந்தித்து நாங்களும் ஈரோஸ் அமைப்பு நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் என்று எங்களது கட்சியின் பெயரை பயன்படுத்திக் கொண்டு திரிகின்றார்கள் இவ்வாறானவர்களை பொது மக்கள் இனம்காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.





                                           ( எஸ்.எம்.எம்.முர்ஷித் ) 

No comments:

Post a Comment

Post Top Ad