திருப்பழுகாமம் இளைஞர்களின் ஏற்பாட்டில் இரத்ததானமுகாம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 11 August 2024

திருப்பழுகாமம் இளைஞர்களின் ஏற்பாட்டில் இரத்ததானமுகாம் !



இன்றைய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் சமூக அக்கரையும் பொதுநலம் நோக்க சிந்தனையும் குறைந்துவரும் நிலையில் அவற்றினை பொய்யாக்கும் வகையில் இளைஞர்கள் முன்னெடுத்த செயற்பாடு அனைவரது பாராட்டுகளையும் பெற்றள்ளது.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை தீர்க்கும் வகையில் "உதிரம் கொடுத்து உயிர்காப்போம்" எனும் தொனிப்பொருளின் இரத்தானமுகாம் ஒன்று இன்று (11) திருப்பழுகாமம் பிரதேசவைத்தியசாலையில் இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. 

திருப்பழுகாமம் இளைஞர்களின் பங்களிப்புடன் மட்டக்களப்பு போதனா வைத்தியாலையின் இரத்தவங்கி வைத்தியர் க.விவேகானந்தநாதன் தலமையில் திருப்பழுகாமம் பிரதேசவைத்திய சாலையில் இரத்ததான முகாம் இடம் பெற்றது.



அத்துடன் பெருமளவான இளைஞர்களும் இதன்போது இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பாரியளவில் இரத்தப்பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் அவற்றினை நிவர்த்திக்கும் வகையில் இரத்ததான முகாம்கள் நடாத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



No comments:

Post a Comment

Post Top Ad