ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி மணிக்கூட்டு சந்தியில் இருந்து வாழைச்சேனைக்கு செல்லும் பிரதான வீதியில் குறுக்கறுக்கும் புகையிரத வீதியை கடக்கும் பகுதி மிக நீண்ட நாட்களாக சேதமடைந்து போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இப்பகுதியை திருத்தி தருமாறு தனிநபர் போராட்டமும் இடம் பெற்றது.
இவ் வீதியை திருத்தம் செய்வதற்காக ஓட்டமாவடி பிரதேச செயலளார் ஏ.தாஹிர் எடுத்து கொண்ட தொடர் முயற்சியின் பயனாக இவ் வீதி திருத்த பணிகள் நடைபெறவுள்ளது.
ஓட்டமாவடி மணிக்கூட்டு சந்தியில் இருந்து வாழைச்சேனைக்கு செல்லும் பிரதான வீதியில் குறுக்கறுக்கும் புகையிரத வீதியை கடக்கும் பகுதி திருத்த வேலைகளுக்காக எதிர் வரும் 03.08.2024ம் திகதி காலை 7:00 மணி தொடக்கம் மாலை 4:30 மணிவரை வீதி முற்றாகவும் மறுநாள் 04.08.2024ம் திகதி மாலை 4:30 மணி தொடக்கம் இரவு 10:30 மணி வரை பகுதியாகவும் மூடப்படும்.
எனவே திருத்த வேலை நேரத்தில் அவ் வீதியை பயன்படுத்தாமல் சாவன்னாட்டு சந்தியூடாக செல்லும் வீதியை பயன்படுத்துமாறும் அதனுடன் மாற்று வீதிகளை பயன் படுத்தி ஒத்துழைக்குமாறு பொது மக்களை புகையிரத திணைக்களமும் வீதி அபிவிருத்தி திணைக்களமும் ஓட்டமாவடி பிரதேச செயலகமும் கேட்டுக் கொள்கின்றது.
( எஸ்.எம்.எம்.முர்ஷித் )
No comments:
Post a Comment