மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் பொது சுகாதார பரிசோதகர் S.ரவிகரன் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் உணவுச்சட்டத்தின் கீழ் மாம்பழ பானத்தில் உணவுகாப்புக்காக பாவிக்கபடும் இரசாயன பொருளின் வீதம் அதிகமாக காணப்பட்டதால் தொடுக்கபட்ட வழக்கில் நேற்றைய தினம் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
இதன்போது, வியாபார நிலைய உரிமையாளருக்கு ரூபாய் 9000 தண்டபணமும் விநியோகித்தவருக்கு 9000 தண்டபணமும் மாம்பழபான உற்பத்தியாளருக்கு ரூபாய் 18000 தண்டபணத்துடன் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கபட்ட 6 மாத சிறை தண்டனையும் அத்துடன் சிறுவர்கள் அருந்தும் பானத்தை நியம முறைப்படி தயாரிக்குமாறும் எச்சரிக்கையும் விடுக்கபட்டது.
No comments:
Post a Comment