கஹகொல்ல, தியதலாவையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தேசாபிமானி.விஷ்வகீர்த்தி. மொஹமட் தாஹிட் மொஹமட் நிப்fராஸ் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கஹகொல்ல ப/அல் பத்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பட்டதாரி ஆசிரியரும் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலலயில் பயிற்றப்பட்ட ஆசிரியராகவும், உளவியல் ஆலோசகராகவும், பூப்பந்தாட்டம் (Badminton) விளையாட்டின் தேசிய நடுவராகவும், பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றுவதுடன் எழுத்தாளராகவும், கவிஞராகவும், அறிவிப்பாளராகவும், தேசிய வளவாளராகவும் கடமையாற்றுகிறார்.
மேலும் இவர் சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பதுடன் 2016 ம் ஆண்டு இவருக்கு சமூக பணிக்கான "தேசாபிமானி மற்றும் விஷ்வகீர்த்தி" தேசிய அரச கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் இவர் சர்வதேச ரீதியாக பல அரச சார்பற்ற சமூக அமைப்புகளில் இலங்கைக்கான பிரதிநிதியாகவும், தேசிய ரீதியாக பல அரச சார்பற்ற சமூக அமைப்புகளில் உயர் பதவிகளைக் வகித்து வருகிறார்.
மேலும் இவர் இலக்கியம் மற்றும் கலை துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பதுடன் இவருக்கு இலக்கியம் மற்றும் கலை துறைக்காக அறிஞர்.ஏ.சி.சித்திலெப்பை விருது, ஒராபி பாஷா விருது, புலவர்.ஏ.ஆர்.அப்துல் காதர் விருது, காமினி பொன்சேகா ஞாபகார்த்த விருது, ரத்ன தீப விருது, ஊவா மாகாண சாஹித்ய விருது, பிஷப் ஒப்f கலாம்போ விருது மற்றும் தேசிய இளைஞர் விருதுகள் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவர் பண்டாரவளை தூய தோமயர் கல்லூரியின் (S.Thomas'College) பழைய மாணவரும் பண்டாரவளை ப/சேர் ராஸிக் பரீட் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற உப அதிபர் எச்.எம்.தாஹிட், எம்.கே.என்.நியாஸா தம்பதிகளின் அன்பு செல்வ புதல்வனும், மர்ஹூம்களான பதுளை முஸ்லிம் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திக்குவல்லை அல் ஹாஜ். எம்.கே.எம்.கலீல், ஏ.எல்.இஸட். ஸாபா, கஹகொல்ல கே.ஹமீட், கே.ஐ.அஸீஸா உம்மா ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
No comments:
Post a Comment